கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனாதிபதி தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள்
2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி...
சுப நேரத்தில் வேட்புமனுவை கையளித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்புமனுவை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சில நிமிடங்களுக்கு முன்னர் கையளித்தார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கை இன்று (15ஆம் திகதி) காலை நடைபெறவுள்ளதுடன், கட்டுப்பணம் செலுத்திய 40...
வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார்.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.
சஜித்தின் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை கண்காணிக்கும் ஜலனி
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார செயற்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பை திருமதி ஜலனி பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட...
தமிழ் பொது வேட்பாளர் தேவையில்லாத விடயம் – சாணக்கியன்
தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ள...
தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் சரத் பென்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராஜினாமா செய்துள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளதுடன் அதற்கான கட்டுப்பணத்தையும்...
ரணிலுக்கு ஆதரவு வழங்கும் பவித்ரா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...
அனைவருக்கும் ஜனாதிபதியாகும் தகுதி இல்லை – ஜானக வக்கும்புர
சகலரும் ஜனாதிபதி வேட்பாளராக முடியும், ஆனால் அனைவருக்கும் ஜனாதிபதியாகும் தகுதி இல்லை என மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் தி ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
சவாலான தருணத்தில் சவாலை ஏற்காதவர்கள்...
பதவி விலகினார் நாமல்
சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவா் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விலகியுள்ளாா்.
இவ்விடயம் தொடா்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றில் அறிவித்தாா்.
இந்நிலையில் நாமல் ராஜபக்ஸவின்...