Home Local அனைவருக்கும் ஜனாதிபதியாகும் தகுதி இல்லை – ஜானக வக்கும்புர

அனைவருக்கும் ஜனாதிபதியாகும் தகுதி இல்லை – ஜானக வக்கும்புர

0

சகலரும் ஜனாதிபதி வேட்பாளராக முடியும், ஆனால் அனைவருக்கும் ஜனாதிபதியாகும் தகுதி இல்லை என மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் தி ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

சவாலான தருணத்தில் சவாலை ஏற்காதவர்கள் தற்போது ஜனாதிபதி வேட்பாளர்களாக தங்களை முன்னிறுத்துவதாக இராஜாங்க அமைச்சர் வலியுறுத்துகின்றார்.

மக்களின் குரலுக்கு செவிசாய்த்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி லோரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் ஊடக மையத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

 

Previous articleபங்களாதேஷ் பாராளுமன்றம் கலைப்பு
Next articleவாஸ் குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை உறுதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here