எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்ததாக பவித்ரா வன்னியாராச்சி அறிக்கையொன்றின் மூலம் தரிவித்துள்ளார்.