Home Local ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

0

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் ஒப்பந்தம் ஒன்றும் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ள.து

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று காலை ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் புதிய உறுப்பினர்களும் இக் கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நேற்று ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இரு தப்பிற்கும் இடையிலுள்ள கொள்கையளவிலான 25 விடயங்கள் அடங்கலாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

Previous articleரணிலுக்கு ஆதரவு வழங்கும் பவித்ரா
Next articleமீண்டு ஒப்பந்தத்தை மீறினால் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை – IMF அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here