கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படைியில் ஜூலை 10 ஆம் திகதி நிறைவடையவிருந்த பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை தற்போது 2024 ஜூலை 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி எக்காரணத்திற்காகவும் பின்னர் நீடிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது