அரசியலமைப்பின் படி தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு தொழிலதிபரான சி.டி.லெனாவ சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நீண்ட காலம் நீடிக்கச் செய்வதற்கான தந்திரமாக இது இருக்கலாம் என சமூகத்தில் வலுவான கருத்துக்களை பரப்ப எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
ஆனால் இந்த மனு உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட மறுநாளே, இது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அல்ல எனவும், ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடமே நடத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.