Home Business கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் திறக்கப்பட்ட “The Mall”

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் திறக்கப்பட்ட “The Mall”

0

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “The Mall” சுங்கவரி இல்லா வர்த்தக வளாகத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (05) பிற்பகல் திறந்து வைத்தார்.

இப்பகுதியில் கட்டப்பட்ட முதல் நகர்ப்புற கட்டணமில்லா வணிக வளாகம் மற்றும் பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் பிற கடைகளைக் கொண்டுள்ளது. ne World, China Duty Free Group (CDFG) மற்றும் உலகப் புகழ்பெற்ற Flemingo ஸ்டோர்கள் ஆகியவை இந்த வணிக கட்டுடத்தில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கும், அதன் மூலம், கொழும்பு துறைமுக நகரம் பிராந்தியத்தில் பெரிய வியாபார மத்திய நிலையமாக அங்கீகரிக்கப்படும். .

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் ஏனைய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எம். எம். நைமுதீன், சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி திரு. சாங் குய்ஃபெங் மற்றும் அமைச்சுச் செயலாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Previous articleவரிசையில் நின்ற எமக்கு ரணிலே நிவாரணம் வழங்கினார் –  பிரதான முச்சக்கரவண்டி சங்கங்கள் ரணிலுக்கு ஆதரவு
Next articleவில்லியம் ஷேக்ஸ்பியரும் சஜித்தின் ஆங்கில வகுப்புகளுக்கு வந்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here