Home Local ஜனாதிபதி தேர்தலில் அதிக பொய்களை பரப்பும் வேட்பாளர் சஜித் – கருத்துக்கணிப்பில் தகவல்

ஜனாதிபதி தேர்தலில் அதிக பொய்களை பரப்பும் வேட்பாளர் சஜித் – கருத்துக்கணிப்பில் தகவல்

0

ஜனாதிபதி தேர்தலில் அதிக பொய்களை பரப்பும் வேட்பாளராக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை மக்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். இரண்டாவது இடத்தை அனுரகுமார திஸாநாயக்க பெற்றுள்ளார்.

சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் அதிக பொய்களை பரப்பும் வேட்பாளர் தொடர்பில் முகநூல் பக்கமான “Bro” பக்கம் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தது. 15 மணி நேர முடிவில் கிடைத்த பதில்களின்படி, இதற்கு 49% வீதமான மக்கள் பதிலளித்துள்ளனர். அதன்படி சஜித் பிரேமதாசவை அதிக பொய்களை கூறும் நபர் என்று பெயரிட்டுள்ளனர். அதன்படி 2805 பேர் பதிலளித்துள்ளனர்.

அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளதுடன், னுரகுமார பொய் சொல்கிறார் என 37% பேர் பதிலளித்துள்ளனர். 2079 பேர் இவ்வாறு பதிலளித்துள்ளனர்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார ஆகிய இரு வேட்பாளர்களும் பொதுமக்களுக்கு வாக்குறுதிகளை அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், உண்மையை கூறும் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

பொய்களை பரப்பும் வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் தீர்க்கமான முடிவை எடுப்பற்கு மக்களுக்கு இந்த கருத்துக்ணிப்பு பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகின்றது.

Previous articleராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் இருந்து நீக்கம்
Next articleIMFஇன் வருமான இலக்கை அடையக்கூடிய வருமானத்தை ஈட்டி இலங்கை சுங்க திணைக்களம் சாதனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here