ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு விரைவில் நாம் மாறாவிட்டால், 2035 முதல் 2040 வரையான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மீண்டும் ஒரு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதாகவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுதெரிவித்துள்ளார்.
தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இனம், சாதி, மதம் வேறுபாடின்றி நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில், தாம் மகிழ்ச்சியடைவதாக சுயேட்சை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடவுச்சீட்டு தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.