கொழும்பு பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
நேற்றும் 1.3% சரிவை சந்தித்திருந்தது. இவ்வாறு இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுர திஸாநாயக்க முன்னிலையில் இருப்பதாக Bloomberg மற்றும் Wionews போன்ற பல வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுடன் இலங்கையின் சமூக ஊடகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் காரணமாக கொழும்பு பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே சமயம் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பெருமளவிலானோர் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார ஜனநாயகம் காரணமாக வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் கடந்த 28ஆம் திகதி 11,000 புள்ளிகளைத் தாண்டியது.
பரிவர்த்தனையின் முடிவில், அனைத்து பங்கு விலை குறியீட்டு மதிப்பு 147.67 அலகுகள் குறைந்து 10,945.81 அலகுகளாக பதிவு செய்யப்பட்டது.
2024 மே மாதத்திலிருந்து ச்சத்திலிருந்த, சந்தை மதிப்பு சுமார் 600 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது.