மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்ட் 4 ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஆளுநர்அனுராதா யஹம்பத் மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், திலித் ஜயவீரவையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி நாளை மறுதினம் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் இணைந்து கொள்ள உள்ளனர்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, காமினி வலேபொட, பிவிதுருஹெலருமவின் தலைவர் உதய கம்மன்பில, புதிய இடதுசாரி முன்னணியின் முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க, கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்