வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இரண்டு வருடங்களாக அரசாங்கத்தை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவு வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து வெளியிட்டாலும், இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலம் மிகவும் இக்கட்டான காலகட்டமாக இருந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, தற்போது அந்த நிலை கடந்துள்ளதாகவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.