ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்கமாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அத்தகைய சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு பரிந்துரைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.