Home Local வேலைநிறுத்தத்தை கைவிட்ட புகையிரத தொழிற்சங்கங்கள்

வேலைநிறுத்தத்தை கைவிட்ட புகையிரத தொழிற்சங்கங்கள்

0

நேற்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இன்று போக்குவரத்து அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, வேலை நிறுத்தத்தை கைவிட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன

இதற்கிடையில், அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் “சேவையை விட்டு வெளியேறியதாகக் கருதி” வழங்கப்பட்ட கடிதங்கள் திரும்பப் பெறப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று காலையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleவேலை நிறுத்தத்தால் தொழிலை இழந்த ரயில்வே உழியர்கள்
Next articleஇன்று முதல் மாவட்ட மட்டத்தில் ஆரம்பமாகும் ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here