Home Local வேலை நிறுத்தத்தால் தொழிலை இழந்த ரயில்வே உழியர்கள்

வேலை நிறுத்தத்தால் தொழிலை இழந்த ரயில்வே உழியர்கள்

0

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் தமது பதவிகளை விட்டு வெளியேறியதற்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தத்தின் மூலம் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியின் சட்டங்கள் மற்றும் உத்தரவுகளை சவாலுக்கு உட்படுத்தியமையினால் குறித்த தொழிற்சங்கங்களை அவர் “பயங்கரவாத தொழிற்சங்கங்கள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டத்தை மீறி, வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் தங்கள் பதவிகளை கைவிட்டதாகக் கருதப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்

மேலும் இது தொடர்பான கடிதங்கள் சுமார் 1000 ரயில்வே ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பணிக்கு திரும்பாதவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்தை நம்பியிருக்கும் பயணிகள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous articleபல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
Next articleவேலைநிறுத்தத்தை கைவிட்ட புகையிரத தொழிற்சங்கங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here