பணிப்புறக்கணிப்பை ஈடுபட்ட புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் சேவைக்கு சமூகமளிக்கத் தவறியிருந்தால் அவர்கள் அனைவரும் சேவையை விட்டு விலகிச் சென்றதாக அறிவிக்கப்படுவார்கள் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்கள் அனைவருக்கும் எதிராக அரச பயங்கரவாதத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்
இதேவேளை வேலை நிறுத்தம் காரணமாக நேற்று பல புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்பட்டதோடு ஒரு சில புகையிரதங்கள் மட்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்
மேலும் இந்த பணிப்புறக்கணிப்பால் பெம்முல்ல புகையிர நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரத்தில் இருந்தே அவர் நேற்று மாலை தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.