Home Local சேவை மூப்பு அடிப்படையில் சட்டமா அதிபர் நியமனம் வழங்கும் வரையறை அரசியலமைப்பில் இல்லை 

சேவை மூப்பு அடிப்படையில் சட்டமா அதிபர் நியமனம் வழங்கும் வரையறை அரசியலமைப்பில் இல்லை 

0

சட்டமா அதிபர் திணைக்களத்தில் சேவை மூப்பு அடிப்படையில் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை சட்டமா அதிபர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்ற வரையறை அரசியலமைப்பில் இல்லை என்றும், இதற்கு முன்பும் இவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சேவை மூப்பு அடிப்படையில் சட்டமா அதிபர் நியமனம் வழங்குவது தொடர்பில் , இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு வழங்கிய பதிலில் ஜனாதிபதி செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் பதவிக்கு வேறு தகுதியுள்ள நபர்கள் இருக்கும்போது ஒருவருக்கு ஆதரவாக மாத்திரம் சட்டத்தரணிகள் சங்கம் செயற்படக் கூடாது எனவும் ஜனாதிபதி செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous articleஆரம்பமாகவுள்ள அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு
Next articleபுகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்பில் பந்துலவின் அதிரடி தீர்மானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here