Home Local அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கினால் வெட் வரியை அதிகரிக்க நேரிடும்

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கினால் வெட் வரியை அதிகரிக்க நேரிடும்

0

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின், தற்போதைய 18% VAT வரியை 20% – 21% ஆக அதிகரிக்க நேரிடும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார்

இதேவேளை தற்போதுள்ள வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளம் வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Previous articleஉன்னத தர்மத்தை அழிக்கும் நபர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி
Next articleவேலைவாய்ப்பிற்காக சென்று முறைகேடாக நடக்கும் இலங்கையர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here