மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதேநேரம், 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பான எழுத்து மூலக் கருத்துக் கோரல்கள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.