Home Local தொடர்ச்சியான சம்பள அதிகரிப்பினால் மக்களின் வரிச் சுமை அதிகரிக்கும் – பந்துல

தொடர்ச்சியான சம்பள அதிகரிப்பினால் மக்களின் வரிச் சுமை அதிகரிக்கும் – பந்துல

0

தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாமானால் நிச்சயமாக நாம் பெற்றுக்கொடுப்போம்.

மக்களின் வரிப்பணத்திலேயே சம்பளம் வழங்கப்படுகின்றது.தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரிச் சுமை அதிகரித்து செல்கின்றது.

நாட்டின் வரிப்பணம் முழுவதனையும் சம்பளம் வழங்குவதற்கு செலவிட முடியாது. ஏனெனில் வரிப்பணம் முழுவதனையும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதற்கு செலவிடுவதன் மூலம் நாட்டை முன்கொண்டு செல்லமுடியாது.

எனவே தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளானது அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleகடன் மறுசீரமைப்பின் பின்னர் இலங்கைக்கு என்ன நடக்கும் – மத்திய வங்கி ஆளுநரின் விளக்கம்
Next articleஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்குதல் ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் நடைபெறும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here