ஜனாதிபதி தேர்தலுக்கு தான் தயார் எனவும், அதற்கான தீர்மானத்தை பொதுஜன பெரமுன எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் வார்த்தைக்காக காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அதுவரை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன் என தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.