இந்தியா – இலங்கைக்கு இடையில் தரை மார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொிவித்துள்ளாா்.
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தாா்.
இதன்போது மேலதிக வலுசக்தியை இந்தியாவுக்கு விற்பனை செய்வது குறித்து பேசப்பட்டு வருவதாகவும், அதற்காக இந்தியா – இலங்கைக்கு இடையிலான குழாய் இணைப்பொன்றை கட்டமைப்பது தொடர்பிலான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் சுற்றுப் பயணத்தின் போது அது குறித்து மேலும் கலந்துரையாட இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, இந்தியா – இலங்கைக்கு இடையில் தரை மார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அது குறித்து எதிர்வரும் நாட்களில் ஆராயவிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.