Home Business ஈரான் ஜனாதிபதியால் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு

ஈரான் ஜனாதிபதியால் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு

0

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது

மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இத்திட்டம் ஒன்றாகும்.

இதேவேளை ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் குறித்த திட்டத்தைத் திறந்து வைப்பதற்காகவே ஈரான் ஜனாதிபதி இன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தார்.

மேலும் ஈரான் – இலங்கை ஜனாதிபதிகளின் பங்கேற்புடன் 5 இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Previous articleநீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை – மைத்திரி
Next articleஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது – ஜனாதிபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here