Home Local முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு – ஜனாதிபதி பணிப்பு

முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு – ஜனாதிபதி பணிப்பு

0

கொழும்பு வலயத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளை தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் கல்விசார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாடசாலைகள் அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் இதன்போது எடுத்துரைத்திருந்தனர்.

ஆசிரியர் பற்றாக்குறை, இடநெருக்கடி, வகுப்பறைகள் தட்டுப்பாடு, சிங்கள மூலம் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் இன்மை, அதிகமாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பாடசாலைகள் இன்மை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் சிங்களமொழி மூலம் கல்வி கற்பதோடு அவர்களுக்கு இஸ்லாமிய பாடத்தினை கற்பிக்க ஆசிரியர் இன்மையினால் மாணவர்கள் நெருக்கடியினை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள 19 முஸ்லிம் பாடசாலைகளில் சுமார் 200 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டடிருந்தனர்.

கொழும்பில் சில பிரதேசங்களில் முஸ்லிம் பாடசாலைகள் இன்மையால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகிச் செல்வது குறித்தும் ஆராயப்பட்டிருந்தது.

கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்

Previous articleசீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
Next articleநீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை – மைத்திரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here