ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தந்த கடவத மஹமாயா மகளிர் பாடசாலை மாணவிகளுக்குஅமைச்சரவைக் கூட்டத்தைக் காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்கினார்.
நேற்று மாலை அந்த மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்திருந்தனர்
இலங்கைக்கு ஒரு இளம், படித்த அரசியல் சந்ததியினர் மிகவும் தேவைப்படுகிறார்கள். இந்த நாட்டில் வெறும் இனவாத, மதவாத, ஜனரஞ்சக அரசியலுக்குப் பதிலாக நவீன, ஜனநாயக மற்றும் நடைமுறை அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். அதற்காக இளைஞர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தாகும்.