நாட்டில் ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை தற்போது ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தனது X தத்தில் நாட்டை ஸ்திரமாக மாற்றும் உண்மையான ஹீரோக்கள் இலங்கை மக்களே என குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வசும மூலம் 2.4 மில்லியன் மக்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், 2 மில்லியன் மக்களுக்கு காணி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வூதியத்தை அதிகரிப்பது, குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவது உள்ளிட்ட பல பாதிப்புக்குள்ளானவர்களை பாதுகாக்கும் நோக்கில் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.