2023 டிசம்பர் இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகிறது.
சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான அந்நியச் செலாவணி வசதியும் இதில் உள்ளடங்குவதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மொத்தத்தில், மத்திய வங்கி 2023 இல் நிகர அடிப்படையில் சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வாங்கியது.
சீனாவின் மக்கள் வங்கியின் அந்நியச் செலாவணி கடன் வசதி உட்பட 2023 டிசம்பர் மாதத்திற்குள் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்புகளின் இறக்குமத 2021ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக 03 மாத இறக்குமதி வரம்பை மீறும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது டிசம்பர் 2023 இன் வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.