Home Local ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் தினசரி மதிய உணவு

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் தினசரி மதிய உணவு

0

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஒன்றாம் தரம் முதல் 5ம் தரம் வரையிலான சகல மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆரம்ப பிரிவில் சுமார் 16 இலட்சம் மாணவர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு பாடசாலை மதிய உணவு வழங்குவதற்காக 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் தவணை முடிவடைந்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் உடனடியாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 162 பட்டதாரிகளுக்கு இலங்கை ஆசிரிய சேவையின் 3-1 (அ) தரத்திற்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

Previous articleஇரண்டு வருடங்களுக்கு முன் சவாலை எதிர்கொள்ள ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்வந்தார் – மனுஷ
Next articleஅரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here