Home Local நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து

0

ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

அத்துடன், பாராளுமன்றத்தில் விவாதித்து திருத்தங்களுடன் கடந்த ஜனவரி மாதம் 09ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தேசிய நீரளவை சட்டமூலம் மற்றும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் ஆகியவற்றிலும் சபாநாயகர் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலங்கள் 2024ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க தேசிய நீரளவை சட்டம் மற்றும் 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றன..

Previous articleஜனவரி மாதத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
Next articleதயா ரத்நாயக்கவின் நியமனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – சரத் பொன்சேகா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here