Home Local மடு திருத்தலத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது காட்டாயமாகும் – ஜனாதிபதி

மடு திருத்தலத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது காட்டாயமாகும் – ஜனாதிபதி

0

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை ஆரம்பமாகியது.

இதன்போது மடு திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

மடு மாதாவின் திருவிழாவானது எமது தேசிய வைபவமாகும். எனவே இந்த உற்சவத்திற்கு பாதுகாப்பதும் அதனை மேலும் சிறப்புறச்செய்வதும் அரசாங்கத்தின் கடமையாகும். மேலும் கடந்த வருடம் நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தது அந்த சந்தர்ப்பத்தில் நாம் எதிர்பார்க்காத வகையில் பலர் இந்த திருத்தலத்திற்கு வருகைதந்து எமது நாட்டை இந்த பாரிய அழிவில் இருந்து பாகாக்குமாறு மருதமடு அன்னையிடம் மன்றாடினர். அந்த வேண்டுதலுக்கு ஒருவருடத்தின் பின்னர் எங்களுக்கு பலன் கிடைத்துள்ளது.இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுதல் நடத்திய அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் இந்த பிரதேசத்தின் வானிலை மிக அருமையான ஒன்று அதனை கடவுள் எமக்கு பரிசளித்துள்ளார் அதனை கொண்டு இந்த பகுதியானது பாரிய வலுசக்தி கேந்திர ஸ்தானமாக உருவெடுத்துள்ளது. அதனை கொண்டு மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் வலுசக்தி மையங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம்.

இங்குள்ள வளங்களை பயன்படுத்தி நாம் பல முன்னேற்றங்களை அடையும் அதேவேளை இந்த பரிசுத்த பூமியை பாதுகாப்பதற்கும் வனப்பகுதியை பாதுகாப்பதற்கும் நாம் மறந்துவிடக் கூடாது. எனவே எந்தவொரு நடைவடிக்கைகளின் போதும் இந்த புனித பூமியின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட பின்னரே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு நான் தெரிவித்துள்ளேன்.

இந்த பகுதிளில் இன்னும் ஓரிரு வருடங்களில் பாரிய அபிவிருத்திகள் ஏற்படவுள்ளன. எனவே அந்த அபிவிருத்திகளின் போது இந்த புனித பூமி பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயம் அதற்காக அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

Previous articleசட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்
Next articleமுதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கவுள்ள 2024 வரவு செலவுத் திட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here