Home Local சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்

0

கடந்த ஒன்றரை வருடங்களில் விசேட பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய சுமார் 120 வைத்தியர்கள் தமது சேவை ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமான முறையில் மீண்டும் வௌிநாட்டுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த வைத்தியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சில விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதன் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.

விசேட வைத்திய நிபுணராக தரம் உயர்வதற்கு, ஒரு மருத்துவருக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்புப் படிப்புக்கு உரிமை உண்டு, வெளிநாட்டில் சிறப்புப் பயிற்சி பெற்ற பிறகு, அவர்கள் குறைந்தது 8 ஆண்டுகள் இலங்கையில் பணியாற்ற வேண்டும்.

இந்த நிபுணத்துவ வைத்தியரைப் பயிற்றுவிப்பதற்கு அரசாங்கத்திற்கு 12 முதல் 15 மில்லியன் ரூபா வரை செலவாகும்.

எனினும் கடந்த ஒன்றரை வருடத்தில் இவ்வாறு வந்த 363 வைத்தியர்களில் 120 பேர் தெரிவிக்காமல் சட்டவிரோதமாக வெளிநாடு திரும்பியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

Previous articleட்விட்டர் தலைமையகத்திலிருந்து X சின்னம் நீக்கம்
Next articleமடு திருத்தலத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது காட்டாயமாகும் – ஜனாதிபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here