இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள், கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் ஆரம்ப போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 114 ஓட்டத்தில் சுருட்டி வெற்றி கண்ட இந்திய அணி 2-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று (01) மோதுகின்றன.
டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இந்த போட்டி 7 மணியளவில் இடம்பெறவுள்ளது.