Home Local எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர் எச்சரிக்கை

எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர் எச்சரிக்கை

0

பாராளுமன்றத்தில் விசேட பதவி வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற ஒருவர் பாராளுமன்றத்தின் குழுக்களுக்குச் செல்வது பொருத்தமானதல்ல. இதன்படி, நிதிக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பது பொருத்தமானதல்ல என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்ற ஆரம்பத்தின் போது வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், ஆளும் கட்சி அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என விசேட பதவிகளை வகிப்பவர்கள் இவ்வாறு குழுக்களுக்கு செல்வது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு அதிகாரி ஒருவரை அழைத்து தகவல்களைப் பெறுவதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஜித் பிரேமதாச தலைமையில் குழுவொன்றை நிறுவி அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார். அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என சபாநாயகரை கேட்டுக் கொண்டார். சஜித் பிரேமதாச, தான் விசாரிக்கும் குழுவில் கலந்து கொள்ளாத அதிகாரிகளை சிறப்புரிமை மீறலாக கருத வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

Previous articleபாவனையாளர்களுக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை – வலுசக்தி அமைச்சர்
Next articleஜனாதிபதி இந்தியா பயணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here