இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் கடந்த மார்ச் மாதம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பின்னர் இலங்கைக்கு கிடைக்கும் மிகப் பெரிய நிதி நிவாரணம் இதுவாகும் எனவும் அதற்கான அனுமதி நேற்று (28) கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.