இலங்கையின் விவசாயத் துறையின்அடுத்த 5 வருடங்களுக்கான அபிவிருத்திக்காக 3800 மில்லியன் ரூபாவை வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி கால்நடை வளர்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ‘பாலால் நிறையும் நாடஞ’ திட்டத்திற்காக இந்தப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் கால்நடைத் துறையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட அதிகூடிய தொகை இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர விவசாய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் கீழ் புனரமைக்கப்படாத கிராமப்புற விவசாய வீதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.