சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று வருகை தந்த குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர்.
இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான முதல் மதிப்பீட்டிற்கு முன்னதாக, வழக்கமான ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு விஜயம் செய்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் இயக்குநர் திரு. கிருஷ்ணா ஶ்ரீனிவாசனும் இந்த சிறப்புக் குழுவில் இணைவார் என IMF வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.