முடிந்தால் ஹம்பாந்தோட்டைக்கு வந்து தம்மை தோற்கடிக்குமாறு போராட்டக்காரர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
இன்னும் பல அரசாங்கங்கள் போராட்டங்களால் மாற்றப்படுமா? தேர்தல் மாறுமா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளார்.
88/89 காலப்பகுதியில் பயங்கரவாதத்தின் ஊடாக அரசாங்கங்களை மாற்றுவதற்கு முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியின் சில தலைவர்கள் அந்த போராட்டங்களை நசுக்கி தமது அரசாங்கங்களை பாதுகாக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.
இந்த நாட்டில் எப்பொழுதும் ஜனநாயக தேர்தல் மூலமே அரசாங்கங்கள் மாற்றப்பட வேண்டும் எனவும் தேர்தல் நடைபெறும் போது மக்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று தாம் விரும்பும் கட்சி மற்றும் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.