தனிப்பட்ட அரசியல் கருத்துக்களுக்கு முன் நாட்டைப் பாதுகாப்பது அவசியம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவான தலைமைத்துவம் மற்றும் தீர்மானங்களின் கீழ், வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தனிப்பட்ட அரசியல் கருத்துக்களுக்கு முன்னர் அவரது தொலைநோக்கு மற்றும் நாட்டைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்திற்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்றிணைந்து செல்வதன் மூலம் நாட்டிற்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது X தனத்தில் இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளார்.
Under President Ranil Wickramasinghe’s leadership, Sri Lanka has made significant strides in overcoming the most severe crises in the history. His clear and decisive leadership has guided the nation toward stability and growth. To prevent a return to such challenging times, it is… pic.twitter.com/WpZbbOKVJo
— Shehan Semasinghe (@ShehanSema) July 29, 2024