சிரமங்களை எதிர்நோக்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (MSME) மீண்டும் மேம்படுத்தும் நோக்கத்துடன் முதலீடு மற்றும் செயல்பாட்டு மூலதன வசதிகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய நிதி வசதி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஊடாக பொருளாதார நெருக்கடியின் போது அதை எதிர்கொண்ட மற்றும் தற்பொழுதும் செயற்பட்டு வரும் நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு ஆதரவை வழங்கவும் செயற்பாடற்ற கடன் பிரிவின் கீழ் நுண்,சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சிகளுக்காக 8% செயல்பாட்டு மூலதனமும், முதலீடுகளுக்காக 7% வீதம் வரை தாங்கக் கூடிய நிவாரண வட்டி விகிதத்தில் கடனையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.