Home Local இலவசக் கல்வி என்னவாயிற்று? தனியார் வகுப்புக்களில் பிரச்சார நடவடிக்கை

இலவசக் கல்வி என்னவாயிற்று? தனியார் வகுப்புக்களில் பிரச்சார நடவடிக்கை

0

தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களை டியூஷன் கடைக்காரர்கள் என்று முத்திரை குத்தி இலங்கையில் இலவசக் கல்வி உரிமையை பாதுகாக்கும் ஒரே குழு தாங்கள்தான் என்று காட்ட முயலும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது தங்களின் அரசியல் நோக்கதிற்காக தங்களால் டியூஷன் கடைக்காரர்கள் என முத்திரைக் குத்தப்பட்ட ஆசிரியர்களின் தனியார் வகுப்புகளுக்கு சென்று அரசியல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இம்மாதம் 14ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேசத்தில் அவர்களால் நடாத்தப்பட்ட NPP Youth எனும் அரசியல் நிகழ்வில் பாடசாலை வயதுப் பிள்ளைகளை ஈடுபடுத்தும் நோக்கில் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.

இலவசக் கல்வியை பாதுகாப்பதற்காக திருமாவிதான (திரிமா) வேணுர எதிரிசிங்க போன்ற மாணவர் தலைவர்களை பலியிட்ட கட்டியான மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால்அத்தனகல்ல நிட்டம்புவ போன்ற பிரதேசங்களில் மாணவர் சமூகத்திற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Previous articleஇன்று முதல் மாவட்ட மட்டத்தில் ஆரம்பமாகும் ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்
Next articleகட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here