Home Local சிசு சரிய போக்குவரத்து சேவையை விரிவுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

சிசு சரிய போக்குவரத்து சேவையை விரிவுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

0

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசு செரிய போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் அசௌகரியங்கள் இன்றி உரிய நேரத்திற்கு பாடசாலை சென்று மீண்டும் பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்லக்கூடிய விதத்தில் சிசு செரிய போக்குவரத்து சேவையானது 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கி 1,537 பாடசாலை பஸ் சேவைகள் தற்போது இயங்கி வருகின்றன, நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இந்த போக்குவரத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த ஆண்டில் புதிதாக 500 சிசு செரிய பஸ் சேவைகளை ஆரம்பிக்க தேவையான 202 மில்லியன் ரூபாவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிதியில் இருந்து ஒதுக்குவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Previous article1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம் – ஜீவன்
Next articleபல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here