இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூன் 2024 இல் 4.3% ஆல் உயர்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 மே மாதத்தில் 5.41 பில்லியன் டொலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்து மதிப்பு, 2024 ஜூனில் 5.64 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
இதேவேளை நிதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.