Home Local இரண்டு வருடங்களுக்கு முன் சவாலை எதிர்கொள்ள ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்வந்தார் – மனுஷ

இரண்டு வருடங்களுக்கு முன் சவாலை எதிர்கொள்ள ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்வந்தார் – மனுஷ

0

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட சவாலை ஏற்றுக்கொள்ள அனைவரும் தயங்கிய போது, ​​தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டும் அச்சமின்றி சவாலுக்கு முகங்கொடுத்ததாகவும், தாம் உட்பட ஒரு குழுவினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று (1) அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஜயகமு ஶ்ரீலங்கா’ நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து ஷ்ரம வாசன நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் பாடசாலை மாணவர்களுடன் செலவிட்டமை கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பான அனுபவமாக அமைந்தது.

எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள், பால் மாக்கள் இன்றி தேசம் வரிசையில் நிற்கும் யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாகவும், இந்த நாட்டின் உழைப்பாளர்களுக்கு அந்த பெருமையை வழங்க தயங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Previous articleநாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு
Next articleஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் தினசரி மதிய உணவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here