தாம் ஒரு போதும் கட்சிகளை முன்னிறுத்தி செயற்படவில்லை எனவும் நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கே எப்போதும் உழைத்ததாகவும், அதற்கான சரியான இடத்தை இன்று தெரிவு செய்துள்ளதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாட்டை வெற்றிப்பெநச் செய்வதற்காகவே தாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் காரணத்தினாலேயே இலங்கையின் இளம் தொழிலாளர் அமைச்சராகும் வாய்ப்பு தமக்குக் கிடைத்துள்ளதாகவும், இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டை வெற்றியடைச் செய்ய சுதந்திரமான மனிதராக செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் அனுராதபுரத்தில் உள்ள சல்காது மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜயகமு ஶ்ரீலங்கா செயற்பாட்டில் இணைந்து நாட்டின் இளைஞர்களை புத்திசாலிகளாக்கும் ஸ்மார்ட் இளைஞர் சங்கமொன்றை நிறுவும் முதலாவது வேலைத்திட்டத்தில் நேற்று (1) கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.