அமெரிக்காவின் ஷெல் கம்பனியின் துணை நிறுவனமான RM Parks அடுத்த மாதம் முதல் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 நிரப்பு நிலையங்களை அதன் செயற்பாடுகளுக்காக நிறுவனம் கையகப்படுத்த உள்ளதாகவும் பின்னர் நிறுவனம் மேலும் 50 நிரப்பு நிலையங்களை நிர்மாணிக்கத் தயாராக உள்ளது.
இலங்கையில் பெற்றோலிய சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம் இதுவாகும். அவர்கள் ஒவ்வொரு மாதமும் 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை இறக்குமதி செய்வார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் RM Parksஇனால் குறைந்தபட்சம் ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையமாவது திறக்கப்படும் எனவும், கொழும்பு மாவட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.