Home Foreign கிரேன் இயந்திரம் வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு

கிரேன் இயந்திரம் வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு

0

மராட்டிய மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சாலையின் 3 ஆம் கட்டுமான பணிகள் தானே மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில் சாலை அமைப்பதற்கான மேம்பாலம் கட்டுமான பணிகள் இன்று அதிகாலை நடைபெற்றன.

மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க இராட்சத கிரேன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தொழிலாளர்கள் இன்று அதிகாலை வேலை செய்து கொண்டிருந்த போது கிரேன் இயந்திரம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகிறது.

Previous articleபணவீக்கத்திற்கு கீழே – மத்திய வங்கி கூறியது போல் ஒற்றை எண்ணிக்கைக்கு வருகிறது
Next articleஇறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here