வரவு செலவு மற்றும் நலன்புரி உதவியாக இலங்கைக்கு வழங்கவுள்ள 700 மில்லியன் டொலரை ஜூலை மாதம் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த பணிப்பாளர் குழாம் கூட்டத்தின் போது அனுமதிக்கப்படவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு பொருளாதாரம் மீண்டும் அபிவிருத்தியடைய தொடங்குவதற்கு இந்த ஆண்டு 2% தளர்வுகளை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆண்டு வரலாறு காணாத குறைவால் 7.8% சுருங்கியுள்ளது.
மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் இலங்கை உலக வங்கி மற்றும் பிற பலதரப்பு நிறுவனங்களிலிருந்து 4 பில்லியன் டொலருக்கும் அதிகமாக எதிர்பார்க்கிறது.
முன்மொழியப்பட்ட உலக வங்கி நிதியிலிருந்து 500 மில்லியன் பட்ஜெட் உதவிக்காக வழங்கவுள்ளதுடன் அந்த தொகையானது 250 மில்லியன் என்ற வீதத்தில் இரண்டு தொகுதிகளாக வழங்கப்படவுள்ளன.
இந்த தொகையானது ஒக்டோபர் மாதமளவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு மற்றும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் ஆய்வு ஆகியவற்றை உலக வங்கி ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.