புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி இன்று (23) பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது பிரதமராக பதவி வகித்து வந்த தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அங்கு அவர் தெரிவித்தார்.
அதன் காரணமாக முதலில் யாரையாவது பிரதமர் பதவிக்கு நியமிக்க வேண்டும், அதன் பிறகு அமைச்சரவை நியமிக்கப்படும் என்று கூறினார்.
அமைச்சரவையில் நான்கு பேர் கொண்ட குழு இருப்பதாக அவர் கூறினார்.