தாம் பதவி விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தி அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் நான் பதவி விலகும் நபர் அல்ல என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.
“இந்தப் போட்டியில் இருந்து நான் இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி இப்போது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. நான் இராஜினாமா செய்பவன் அல்ல என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களைப் போல விட்டுவிட்டு ஓடும் மனிதர் அல்ல
சஜித் பிரேமதாசவிடமும் சொல்கிறேன், நான் கற்றுக்கொடுக்க மறந்த ஒன்றை கற்றுக்கொடுக்கின்றேன், விட்டு ஓடாதே என்று கற்பிப்பேன்.
இக்கட்டான நேரத்தில் இதைப் பொறுப்பேற்று, கடினமான முடிவுகளை எடுத்து மக்கள் வாழ உதவினேன். இதை விட்டுவிட்டு நான் ஓடவில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கான புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே எனது முதன்மையான நோக்கமாகும். என்றார்.” என்று கூறினார்.