முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிர்கால அரசியல் சக்திகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்குவார் என விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ரணிலிள் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே விஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியலிலிருந்தும் பாராளுமன்றத்திற்கு வரமாட்டாரா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ருவான் விஜயவர்தன, தேசிய பட்டியலிலிருந்தும் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு வரமாட்டார் என தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது சதவீதமாக 17.27% ஆகும்.
இதேவேளை, புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன், தனக்கு அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டு மக்களுக்கான கடமைகளை தயக்கமின்றி நிறைவேற்றுவேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.